MARC காட்சி

Back
திருச்சோற்றுத்துறை ஓதணவனேஸ்வரர் கோயில்
245 : _ _ |a திருச்சோற்றுத்துறை ஓதணவனேஸ்வரர் கோயில் -
246 : _ _ |a ஓதணவனேஸ்வரர், தொலையாச் செல்வர், தானே முளைத்தெழுந்த பெருமான்
520 : _ _ |a திருச்சோற்றுத்துறை திருவாரூர் மாவட்டம் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலமாகும். சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்றுள்ளது. இக்கோயிலில் உள்ள ஏழுகன்னியர் சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. சோழர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் கலையழகு மிக்கவையாக இங்கு அமைந்துள்ளன. அய்யனார் சிற்பம் தனிச் சிறப்புடையது. நடுகல் வீரனது சொர்க்கம் செல்லும் காட்சி பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. இப்பலகைக் கல் இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. நாற்கரமாக நாகரபாணியில் அமைந்த இக்கோயில் எளிய வடிவமைப்புடையது. தேவகோட்டத்தில் அமைந்துள்ள சிற்பங்களுள் உள்ள முருகன் பிரம்மசாஸ்தா கோலங்கொண்ட அதாவது பிரம்மனின் கை இலச்சினைகளைக் கொண்டு விளங்கும் சிற்பம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது.
653 : _ _ |a திருச்சோற்றுத்துறை, ஓதணவனேஸ்வரர் கோயில், திருவையாறு, திருவாரூர் மாவட்டம், ஏழுகன்னிகள், அய்யனார் சிற்பம், நாகரபாணி, சோழர் கற்றளி, தேவாரப்பாடல் பெற்ற தலம்
710 : _ _ |a தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம்
905 : _ _ |a கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடியுள்ளனர். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 13-வது தலம் இது.
914 : _ _ |a 10.87582295
915 : _ _ |a 79.13711325
916 : _ _ |a ஓதணவனேஸ்வரர்
918 : _ _ |a அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை
923 : _ _ |a சூரிய தீர்த்தம், காவிரி
925 : _ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
926 : _ _ |a சப்தஸ்தானத் திருவிழா (ஏழுர் திருவிழா), மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை
927 : _ _ |a சோழர்காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a சதுரவடிவமான கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். கருவறை விமானத்தின் வெளிப்புறச் சுவரில் உள்ள தேவக்கோட்டங்களில் வடக்கில் முருகன் பிரம்மனை சிறையில் அடைத்த பிரம்மசாஸ்தா கோலத்திலும், தெற்கில் ஆலமர்ச் செல்வன், உள்ளனர். அர்த்தமண்டபக் கோட்டங்களில் முறையே தெற்கில் கணபதியும் காட்டப்பட்டுள்ளனர். பைரவர், காலனை வதைத்த காலாந்தகமூர்த்தி, அண்ணாமலையார், திருமால், ஏழுகன்னியர், கன்னிமூலை கணபதி, துர்க்கை, வாயிற்காவலர்கள், சண்டேசர், நடுகல் வீரன் சொர்க்கத்திற்கு செல்லும் பலகைக் கல் புடைப்புச் சிற்பம் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
930 : _ _ |a அருளாளன் என்னும் பக்தனின் பசிப்பிணியை நீக்கியருள இறைவன் அள்ளஅள்ளக்குறையாத அட்சயப் பாத்திரத்தை வழங்கியதால் இத்தலம் திருச்சோற்றுத்துறை என வழங்கப்படுகிறது. சப்தஸ்தான திருவிழாவின் போது இங்கு அன்னம்பாலிப்பு நடைபெறுவது தனிச்சிறப்பு. இந்திரன், சூரியன், கௌதமர் வழிபட்ட தலம் இது.
932 : _ _ |a இக்கோயில் எளிய அமைப்புடையது. கருவறை விமானம் ஒரு தளமுடையது. தாங்குதளத்திலிருந்து கூரைவரை கற்றளியாகவும், விமானம் சுதையாகவும் தற்போது அமைந்துள்ளது. எளிய அமைப்புள்ள தாங்குதளத்தைப் பெற்றுள்ளது. தாங்குதளம் உபானம், ஜகதி, முப்பட்டைக்குமுதம் ஆகிய உறுப்புகளைப் பெற்றும் விளங்குகிறது. பிரதிபந்த அதிட்டானம் என்பது அதிட்டானத்தில் அதாவது ங்குதளத்தில் புடைப்புச் சிற்பங்களைக் கொண்டிருத்தலாகும். கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதிகளில் அரைத்தூண்களுக்கிடையே கோட்டங்கள் அமைந்துள்ளன. கோட்டங்கள் மகரத்தோரணம் எனப்படும் அலங்கார வளைவுகளைப் பெற்றுள்ளன. மகரத்தோரணத்தின் நடுவே புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தேவகோட்டங்களில் இறையுருவங்கள் வடிக்கப்பெற்றுள்ளன. சுதையாலான விமானம் நாற்கரமாக காட்சியளிக்கிறது. இந்த வகை விமானம் நாகரபாணி எனப்படும். கருவறை சதுரவடிவமானது. இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் இடதுபுறம் அம்மன் திருமுன் காணப்படுகின்றது. அர்த்தமண்டபம், முகமண்டபம், இடைநாழிகை, மகாமண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபத்தில் நந்தி சிற்பமும், நால்வர் சிற்பங்களும் அமைந்துள்ளன. மூன்று நிலைகொண்ட இராஜகோபுரமும், இரண்டு திருச்சுற்றுகளும் கொண்டு விளங்குகிறது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a பசுபதி கோயில்
935 : _ _ |a தஞ்சாவூரிலிருந்து 10கி.மீ. தொலைவில் திருவையாறு வட்டத்தில் திருச்சோற்றுத்துறை அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.00 வரை
937 : _ _ |a திருவையாறு, பசுபதிகோவில்
938 : _ _ |a பசுபதிகோவில்
939 : _ _ |a திருச்சி, சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a தஞ்சாவூர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000073
barcode : TVA_TEM_000073
book category : சைவம்
cover images TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_விமானம்-0004.jpg :
Primary File :

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_முழுத்தோற்றம்-0001.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_இந்திராணி-0024.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_வெளித்தோற்றம்-0002.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_விமானம்-0003.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_விமானம்-0004.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_சுவர்-0005.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_நுழைவாயில்-0006.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_கணபதி-0007.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_தேவக்கோட்டம்-0008.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_முருகன்-0009.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_தேவக்கோட்டம்-0010.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0011.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_சண்டிகேசுவரர்-0012.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_மகிசாசுரமர்த்தினி-0013.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_வாயிற்காவலர்-0014.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_வாயிற்காவலர்-0015.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_விநாயகர்-0016.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_இலிங்கோத்பவர்-0017.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_காலாந்தகமூர்த்தி-0018.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_பைரவர்-0019.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_விஷ்ணு-0020.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_நால்வர்-0021.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_நடுக்கல்-0022.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_மகேசுவரி-0023.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_வராகி-0025.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_கௌமாரி-0026.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_வைஷ்ணவி-0027.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_பிராமி-0028.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_சாமுண்டதேவி-0029.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_கஜலட்சுமி-0030.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_இந்திராணி-0031.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_தேவி-0032.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_வைஷ்ணவி-0033.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_அய்யனார்-0034.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_விநாயகர்-0035.jpg

TVA_TEM_000073/TVA_TEM_000073_ஓதணவனேஸ்வரர்-கோயில்_அய்யனார்-0036.jpg